மோடி பிரதமரானால் நாட்டுக்கே ஆபத்து: திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை: நரேந்திர மோடி பிரதமர் ஆனால் அது நாட்டுக்கு ஆபத்தாகிவிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த 10வது திமுக மாநில மாநாட்டில் அதன் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில்,

கருத்து திணிப்பு
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் இல்லை. இது சமூக நீதிக்கான அறப்போர் ஆகும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிடுகின்றன. ஆனால் அவை வெறும் கருத்து திணிப்புகள் ஆகும். தலித், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களிடம் கேட்காமல் வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகளை எப்படி ஏற்க முடியும்?

திமுக வெற்றி பெறும்
2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது என்றும், திமுக நிச்சயம் தோல்வி அடையும் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் திமுக 25 தொகுதிகளை கைப்பற்றியது. அதே போன்று வரும் தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

நாட்டுக்கு ஆபத்து
மோடி பிரதமர் ஆனால் அது நாட்டுக்கு ஆபத்தாக அமைந்துவிடும். சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படுபவர் மோடி. பாஜக முன்பு திமுகவுடன் கூட்டணி வைத்தது உண்மையே. ஆனால் வாஜ்பாயின் முகம் வேறு, மோடியின் முகம் வேறு.

பாஜக
பாஜக மட்டும் ஆட்சியை பிடித்தால் முதல் வேலையாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும். ஏனென்றால் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிறது. இந்த தேசத்தை உருவாக்குகிறோம் என்று கூறி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயல்படுவார்கள். அதனால் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது.

திமுக கூட்டணி
தற்போதே திமுக கூட்டணி வலுவாகத் தான் உள்ளது. இந்நிலையில் கூட்டணியை மேலும் வலுப்படுத்த சில கட்சிகளை கருணாநிதி சேர்த்தாலும் அதை ஏற்போம் என்றார் திருமாவளவன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications