மோடி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நன்மை ஏற்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தி.மு.க.வை பொறுத்தவரை தேவையென்றால் கூட்டணி வைத்து கொள்வார்கள், வேண்டாம் என்றால் முறித்து கொள்வார்கள். அந்த முடிவைதான் இப்போது எடுத்துள்ளனர். திமுக எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அது பாஜகவை பாதிக்காது. 4 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது கூட தி.மு.க.வின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.
பாஜக எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பாஜகவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. மோடி அலை தமிழகம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும்.
பா.ஜனதா கூட்டணி பற்றி கவலைப்படவில்லை யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. லோக்சபா தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். இந்தியாவில் பாஜக ஆட்சி, மோடி ஆட்சி வருவது உலகத் தமிழர்களுக்கும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நன்மையாக அமையும் என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications