ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும்... சொல்கிறார் சதுரங்கவேட்டை நட்ராஜ்...!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்யவேண்டும் என நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லா இருக்கும் என்றும் நடிகர் நட்ராஜ் கூறியுள்ளார்.
அண்மையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி தயாராக இருங்கள் போர் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசினார். மேலும் தான் ஒரு பச்சை தமிழன் என்றும் தமிழகத்தில் இருந்து தூக்கிப் போட்டல் இமயமலையில் தான் விழுவேன் வேறு எந்த மாநிலத்திற்கும் செல்ல மாட்டேன் என்றார்.
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்றும் அவர் கூறினார். ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆதரவும் எதிர்ப்பும்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

சினிமா பிரபலங்கள் கருத்து
சினிமா துறையில் இருந்து பல பிரபலங்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சதுரங்கவேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் நட்ராஜ், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவரது தனிப்பட்ட விஷயம்
அவர் கூறியதாவது, 'இவரு இதுக்கு தான் லாயக்கு என்று சொல்ல முடியாது. வராரு வரவில்லை என்பது அவரது தனிப்பட்ட விஷயம்.

வந்தால் நல்லா இருக்கும்
அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வந்தால் நல்லா இருக்கும் என்பது எங்க எல்லோருடைய நம்பிக்கை. அப்படி நம்பக் கூடியவர்களில் நானும் ஒருவன்' இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications