தமிழகத்தில் அடித்தளம் இல்லாத பாஜகவை ஆதரித்தால் அதிமுக நஷ்டப்படும்: திருநாவுக்கரசர் ஆருடம்!
தமிழகத்தில் அடித்தளம் இல்லாத பாஜகவை ஆதரித்தால் அதிமுக நஷ்டப்படும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அடித்தளம் இல்லாத பாஜக ஆதரித்தால் அதிமுக நஷ்டப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். தினகரன் கைது விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் தினகரன் கைது நடவடிக்கைகளுக்கு பாஜகவே காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி வந்தார். இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தில் அடித்தளம் இல்லாத பாஜகவை ஆதரித்தால் அதிமுக நஷ்டப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் தினகரன் கைது விவகாரத்தில் ஒருசார்பில்லாமல் தேர்தல் அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது முன்யோசனை இல்லாத நடவடிக்கை எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications