திலகவதி வந்துட்டாங்க.. மெட்ராஸ் ஐஐடிக்குள் "டீமுடன்" நுழைந்து..கசியும் "ரகசியம்": பெருகும் நம்பிக்கை
சென்னை: சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் தொடர்ந்து தற்கொலை செய்து வரும் சூழலில், இதுகுறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலேயே மத்திய அரசால் நடத்தப்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (ஐஐடி) தலைசிறந்ததாக கருதப்படுகிறது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் வருடந்தோறும் படித்து வெளியேறி வருகிறார்கள்.. சென்னை, மும்பை, கான்பூர், லக்னோ உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது ஐஐடி.
ஐஐடி வளாகம்: அதேசமயம், சாதி, மத ரீதியான ஒடுக்குமுறைகள் ஐஐடி வளாகங்களில் நடப்பதாக, அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.. காரணம், முறையாக இங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால் இங்கு உயர்சாதியினர் ஆதிக்கம் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மற்றொருபுறம், ஐஐடி வளாகங்களில் மாணவ, மாணவிகளின் தற்கொலை சம்பவங்களும், மர்ம மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.. அதுவும் சமீபகாலமாக, இதுபோன்ற துயர சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் இந்த வருடம் மட்டுமே மொத்தம் சென்னை ஐஐடியில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த மாணவர்களின் தற்கொலைகள் பெருமளவில் மர்மமாகவே உள்ளன.. தற்கொலை என்ற செய்திகள் வருகிறதே தவிர, அதற்கான காரணங்கள் அவ்வளவாக வெளிவருவதில்லை.. அதற்காக சொல்லப்படும் விளக்கங்களும் போதுமானதாக இருப்பதில்லை.. எனவே, ஐஐடி தற்கொலைகள் எப்போதுமே மர்மமான ஒரு விஷயமாகவே நீடித்து வருகிறது.
நீளும் மர்மங்கள்: இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த தற்கொலைகளின் மர்மத்தை உடைக்க, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையிலான குழுவை தமிழக அரசு கடந்த மாதம் அமைத்திருந்தது.. இந்த குழுவில், திலகவதி ஐபிஎஸ்ஸுடன், சபிதா ஐஏஎஸ், கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் ரவீந்திர கெட்டு மற்றும் அமல் மனோகரன் ஆகிய 5 பேர் கொண்ட குழு இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
மொத்தம் 5 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.. இப்போது திலகவதி தலைமையிலான குழுவானது, விசாரணையை ஆரம்பித்துள்ளது.. அதன்படி, ஐஐடி மாணவர்கள், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பெற்றோர் என 30 பேரிடம் நேரடியாகவும், 20 பேரிடம் வீடியோ கான்பரஸ் வாயிலாகவும் விசாரணையை செய்து கொண்டிருக்கிறது.. இதில், பல மாணவர்கள் தாங்களாகவே விசாரணைக்கு முன்வருகிறார்களாம்.. இதை விசாரணைக் குழுவினரே தெரிவித்துள்ளது.
மன உளைச்சல்: அதுமட்டுமல்ல, ஐஐடி நிர்வாகம் தரும் அழுத்தமானது மாணவர்களுக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், விசாரணை குழு முன்பு மாணவக்ள புகார் தந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, இந்த விசாரணைக்குழுவானது, ஐஐடி நிர்வாக பேராசிரியர்கள், மற்றும் உதவி பேராசிரியர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.. பின்னர், இந்த குழுவின் இறுதி அறிக்கையானது, ஐஐடியின் நிர்வாகத்திடம் அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது..
திலகவதி: இதனிடையே, அந்த மாணவர்களின் நலன் கருதியும், எதிர்காலங்களை முன்னிறுத்தியும், தாமாகவே முன்வந்து விசாரணைக்கு ஆஜராகும் மாணவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் ஐஐடி நிர்வாகம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. திலகவதி தலைமையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளதால், ஐஐடி தற்கொலைகளின் மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications