பெஷாவர் - கென்யா தாக்குதல்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
சென்னை: பாகிஸ்தான் பெஷாவர் மற்றும் கென்யா வெஸ்ட்கேட் வணிக வளாக தாக்குதல்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்று இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் பெஷாவர் தாக்குதல்,கென்யாவில் உள்ள வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் நடத்திய தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது.அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இதுபோன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு மதம் என்பதே கிடையாது இவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவர்கள் இத்தைகைய கோழைத்தனமான தாக்குதல்களை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
போர்களத்தில் கூட பெண்கள், சிறுவர்கள், மதகுருமார்கள் போன்றோர்களை கொல்லக்கூடாது என்ற உயர்ந்த நெறிமுறைகளை வகுத்து தந்த இஸ்லாமிய மார்க்கம் உங்களின் செயல்களை ஒரு பொதும் ஏற்றுக்கொள்ளாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications