234 தொகுதிகளிலும் இ.ஜ.க தனித்துப் போட்டி...50% பெண் வேட்பாளர்கள்: இது பாரிவேந்தரின் ''தில்''!
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சியும் இடம்பெற்றிருந்தது. அக்கட்சிக்கு பெரம்பலூர் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.

அத்தொகுதியில் கட்சியினர் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருந்தார். இதன் பின்னர் சட்டசபை தேர்தலில் இதிய ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் பாரிவேந்தர் கூறிவருகிறார்.
இந்நிலையில் அரியலூர் அருகே கீழப்பழூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடும். இதில் 50% பெண்கள் அதாவது 117 பேர் பெண்கள் போட்டியிடுவர் என்றார்.












Click it and Unblock the Notifications