நானும் வருகிறேன் நீட் போராட்டத்துக்கு.. களத்தில் குதித்தார் இளவரசி மகள்!
நீட் தேர்வுக்கு எதிராக இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது அறக்கட்டளையின் சார்பில் சென்னையில் வருகிற 10ம் தேதி போராட்டம் அறிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது அறக்கட்டளையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 10ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார்.
இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தனது பெயரில் கிருஷ்ணப்ரியா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதிமுக அம்மா அணியின் தணை பொதுச்செயலளார் டிடிவி. தினகரனும் நீட் தேர்வை எதிர்த்து செப்டம்பர் 9ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணப்ரியா தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது :

சாமானிய மக்களின்
சாமானிய மக்களின் " நீட் எதிர்ப்பு அறவழி போராட்டத்திற்க்கான " அழைப்பு.

அனிதா......
இப்பெயரை உச்சரித்ததுமே சட்டென்று நமக்குள் ஒரு வெற்றிடம்...
அனிதாவின் மரணம் தமிழக மக்களாகிய நம் அனைவரையும் ஆழமான துயரில் ஆழ்த்தியிருக்கிறது என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. எதிர்காலத்தில் இம்மாதிரி துயர சம்பவங்கள் தொடராது தடுக்கும் கடமையும், கண்ணுக்கு தெரியாத லட்சோப லட்சம் அனிதாக்களை காப்பாற்றும் கடமையும் பொறுப்பும் சாமானிய மக்களாகிய நம் ஒவ்வொருக்கும் உள்ளது.

அநீதி
பள்ளிக்கூடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளிடேயே வேறுபாடு, பாடத்திட்டத்தில் வேறுபாடு, கல்வித்தரத்தில் வேறுபாடு, வசதி படைத்திட்டோருக்கு ஒரு கல்வி முறை, ஏழை எளிய மக்களுக்கு மற்றொரு கல்வி முறை என கல்வியில் எத்தனையோ வேறுபாடுகள் தமிழகத்தில் நிலவும்போது இந்தியா முழுக்க ஒரே தேர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு , குறிப்பாக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியில்லையா?

கிருஷ்ணப்ரியா பவுண்டேசன்
இந்த அநீதியை எதிர்த்து, கிருஷ்ணப்ரியா பவுண்டேசன் சாமானிய மக்களுடன் இணைந்து காவல்துறை அனுமதியோடு நடத்தும் "நீட் எதிர்ப்பு அறவழி போராட்டத்தில்" பெற்றோர்கள், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர சாமானிய மக்கள் அனைவரும் கலந்து கொண்டு இப்போராட்டத்தினை அமைதியான வழியில் நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செப்டம்பர் 10ம் தேதி
செப்டம்பர் 10ம் தேதி வருகிற ஞாயிற்றுக் கிழமை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு காவல்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது, என்று கிருஷ்ணப்ரியா குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்திலும் இந்தப் பதிவை போட்டு அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் அவர்.
-
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications