லிட்டில் பிளவர் பள்ளியின் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பசியாற்றிய இளையராஜா
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத-காது கேளாத குழந்தைகளை சந்தித்து உணவு அளித்து ஆறுதல் கூறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.
வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் சிக்கித் தவிக்கும் சொந்த பந்தங்களை நினைத்து வெளியூர்களில் வசிக்கும் மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சக மக்களும் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பார்வையற்ற, வாய் பேச முடியாத-காது கேளாத குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் 250 குழந்தைகள் சிக்கி பசியுடன் தவிப்பதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா படகில் அந்த பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவரின் இந்த செயலை அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி அனைவரும் பாராட்டியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications