இளையராஜா ஐயராக மாற முயல்கிறாராம்.. பாரதிராஜா காட்டம்
Recommended Video

சென்னை: இளையராஜா ஐயர் மாதிரி ஆக முயன்றதாகவும் அதனால்தான் ஆங்கில நாளிதழ் அவர் ஜாதியை குறிப்பிட்டு வன்மம் தீர்த்துக்கொண்டதாகவும், இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
ஆங்கில நாளிதழ் ஒன்று இளையராஜா ஜாதியை குறிப்பிட்டு, அதனால்தான் அவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கியதாக தலைப்பு செய்தி வெளியிட்டது.
நாடு முழுக்க இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இளையராஜாவின் இசை மதம், ஜாதிகளை கடந்தது என்று ஒரே குரல் நாடு முழுக்க ஒலித்தது. இதனால் அந்த நாளிதழ் மறுநாளே, தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்தது.

பாரதிராஜா விமர்சனம்
இந்த நிலையில், நிருபர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிடம் அந்த சம்பவம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் ஷாக் ரகம். பாரதிராஜா கூறுகையில், இளையராஜாவை சொல்லனும். அவர் ஐயர் மாதிரி ஆகனும்னா? நாம் எந்த மண்ணில் பிறந்தோம் என சொல்வதுதான் சார் பெருமை.

வேஷம் வேறு
என்னை அடையாளப்படுத்துவது எனது மண், என்னை அடையாளப்படுத்துவது எனது மொழி, எனது ஊர். நீ மூலத்தை மறந்துவிட்டு, புதிதாக வேஷம் போட்டாலே தப்பு. நான் நானாகத்தான் இருப்பேன். ஆன்மீக சிந்தனை வருவது வேறு. வேஷம் போடுவது வேறு என்றார்.

இளையராஜாவை கேட்கனுமாம்
இதை கேட்ட நிருபர் அதிர்ச்சியடைந்து, இளையராஜா வேஷம் போடுகிறார் என்று கூறுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பாரதிராஜா, "எனக்கு தெரியாது, நீங்க அவரை கேளுங்க" என்றார். ஆனால் பாரதிராஜா, இளையராஜாவின், ஆன்மீக நம்பிக்கையை நடிப்பு என மறைமுகமாக குறிப்பிட்டதாகவே விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஆன்மீகம் எனக்கு கிடையாது
பாரதிராஜா மேலும் கூறுகையில், ஆன்மீகமோ, கூன்மீகமோ எனக்கு கிடையாது. மலையை லவ் பண்றேன், செடியை லவ் பண்றேன், ஆடு, மாடுகளை நேசிக்கிறேன். இதுதான். இதற்கு மேல் ஒன்னும் கடவுள் இல்லை. எல்லாவற்றையும் நேசித்து பார், அதற்கு இணையான ஒன்று கிடையாது. குறிப்பிட்ட இடம் வேண்டும் நம்மை உரிமைப்படுத்த, அதற்குத்தான் கோயில்.
|
ஆள் சேர்ப்பதே மதங்கள் வேலை
உலகம் முழுக்க மதங்கள் உள்ளன. எத்தனை கட்சிகள் உள்ளனவோ அப்படி உள்ளது. மதம் என்பதே சட்டாம்பிள்ளைத்தனம். நமக்கு பிடித்ததை வேறு நபர்களுக்கும் பரப்பி ஏற்றேயாக வேண்டும் என நினைப்பதே மதம். நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படைதான் மதம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார். பாரதிராஜா, வைரமுத்து ஆகியோரிடமிருந்து சில மன பிணக்குகள் காரணமாக, இளையராஜா சற்று விலகியே உள்ளார். இருப்பினும் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்தியிருந்தார். ஆனால், பாரதிராஜாவோ சேற்றை வாரி இறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications