வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்தது: நெல்லை எஸ்.பி.
நெல்லை: இடிந்தகரையில் சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது தான் குண்டுகள் வெடித்துச் சிதறியதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்கைரயில் உள்ள சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 7 மணிக்கு நாட்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின. இதில் 6 பேர் பலியாகினர், 3 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தை நெல்லை மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரி பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சுனாமி காலனியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக குண்டுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை ஒரு கும்பல் தயாரித்து வந்துள்ளது. குண்டுகள் தயாரித்தபோது அவை வெடித்துச் சிதறியதில் 6 பேர் பலியாகினர். இது குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சம்பவம் பற்றி வெடிகுண்டு நிபுணர் ஒருவர் கூறுகையில்,
தயாரித்த நாட்டு வெடிகுண்டுகளை வீட்டில் இருந்த வாளி உள்ளிட்ட பாத்திரங்களில் வைத்திருந்ததாக தெரிகிறது. 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வெடித்துச் சிதறியதால் தான் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. இடிபாடுகளுக்குள் வெடிக்காத குண்டுகள் இருக்கின்றன. அதனால் அவை வெடிக்காமல் இருக்க இடிபாடிகளில் தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கின்றனர். விரைவில் அனைத்து குண்டுகளையும் செயல் இழக்கச் செய்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications