முறைகேடாக குளத்து மண் விற்பனை… பெண்கள் திடீர் சாலை மறியல்
முறைகேடாக குளத்து மண் விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே குளத்தை ஆழப்படுத்தும் போது கிடைத்த மண்ணை முறைகேடாக விற்பனை செய்ததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்தது. அதன் எதிரொலியாக வரும் காலத்தில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், ஏரி, குளங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமிக்கவும் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் அணைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

இதில் தூர்வாரும் போது கிடைக்கும் வண்டல் மண் மற்றும் சவுடு மண்ணை இலவசமாக விவசாய நிலங்கள், வீட்டு பயன்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் செய்பவர்கள் தாசில்தாரின் அனுமதியுடன் பயன் படுத்திக் கொள்ள தமிழக அரசு சமீபத்தில் ஆணையிட்டது.
இந்நிலையில், நாகை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் உள்ள புளியகுளத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணியை அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக குளத்தில் உள்ள வண்டல் மண்ணை அள்ளுவதற்கு பதிலாக, 5 அடி ஆழத்திற்கு மேல், ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மணலை அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இப்பணியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications