காதல் அல்லது கள்ளக்காதல்... 17% கொலைகளுக்கு இதுதான் காரணமாம்!
சென்னை: தமிழகத்தில் விழும் கொலைகளுக்கு பெரும்பாலும் காதல் அல்லது கள்ளக்காதல்தான் காரணமாக இருப்பதாக ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. அதாவது 17 சதவீத கொலைகளுக்கு காதல் அல்லது கள்ளக்காதல் காரணமாக இருக்கிறதாம்.
தமிழகத்தில் கடந்த 2015 ஆண்டு நடந்த கொலைகளில் 175 கொலைகளுக்கு காதல் விவகாரமே காரணமாக இருந்துள்ளது. 123 பேரின் கொலைக்கு கள்ளக்காதல் காரணமாக இருந்துள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2015ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் நடைபெற்ற கொலைகள் தொடர்பான விரிவான விவரங்களை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்தான் அதிகம்
காதல் மற்றும் கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடைபெறுவது தமிழகத்தில்தான் அதிகமாக இருக்கிறதாம். தமிழகத்தில் பெருமளவிலான கொலைகளுக்கு இந்த இரண்டில் ஒன்று முக்கியக் காரணமாக இருக்கிறது.

2014க்கு பரவாயில்லை
அதேசமயம், 2014ம் ஆண்டு இந்த அளவானது 19.44 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இந்த அளவு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1748 கொலைகள்
தமிழகத்தைப் பொறுத்தவரை 2015ம் ஆண்டு 1748 கொலைச் சம்பவகள் நடந்துள்ளன. இதுவே கடந்த 2014ம் ஆண்டு நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1805 ஆக இருந்தது.

குற்றங்கள் குறைவு
அகில இந்திய அளவில் குற்றச் செயல்களின் விகிதாச்சாரமானது 27.7 சதவீதமாக இருநி்தது. தமிழகத்தில் இது 17.5 சதவீதமாக இருந்தது. கடந்த 2014ல் இது 18.5 சதவீதமாக இருந்தது. அப்போது அகில இந்திய அளவிலான விகிதாச்சாரம் 26.6 சதவீதமாக இருந்தது.

மூத்த குடிமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்திருந்தது. அகில இந்திய அளவில் தமிழகம் இதில் 2வது இடத்தைப் பிடித்திருந்தது. மொத்தம் 168 மூத்த குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

2014ல் 173 பேர்
கடந்த 2014ம் ஆண்டும் தமிழகம் இரண்டாவது இடத்தில்தான் இருந்தது. முதலிடத்தில் இருந்த உ.பியில் 173 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தமிழகத்தில் 173 பேராக அது இருந்தது.

ஜாதிக் கலவரக் கொலைகள்
தமிழகத்தில் பெரிய அளவில் ஜாதிக் கலவரம் இல்லை என்றாலும் ஜாதி தொடர்பான கொலைகளின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. மொத்தம் 8 மாநிலங்களில் ஜாதி தொடர்பான கொலைகள் நடந்திருந்தன.












Click it and Unblock the Notifications