Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருமம்... கருமம்... நாகர்கோவில் ராஜாவுடன் அவருடைய மாமா போட்ட 'டீலி'ங்கைப் பாருங்க....!

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஒரு கருமாந்திரக் கூத்து நடந்துள்ளது. அத்தை வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கியிருந்த வாலிபர் மீது மோகம் கொண்ட அவரது அத்தை, தனது கணவரின் உதவியுடன் மருமகனையே மணந்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடன் கணவரை சேர விடாமல், மருமகனை மட்டும் சேர்த்துக் கொண்டு புறக்கணித்ததால் கணவர் ஊரை விட்டு போனார். விஷயம் தற்போது வெளியே தெரிந்து அனைவரும் அசிங்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜா. கட்டடத் தொழிலாளி. இவருக்கு கடந்த ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தனது அத்தையான சீதாவின் வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கினார். அவரை சீதா நல்லபடியாக பார்த்துக் கொண்டாராம். இதுதான் கடைசியில் விபரீதமாகிப் போனது.

அத்தை வீட்டுக்கு வந்த ராஜா மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பவில்லை. அவரது பெற்றோர் அழைத்தும் கூட வர மறுத்து விட்டாராம். இதனால் சந்தேகமடைந்த ராஜாவிீன் தாயார் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸ் வந்து விசாரித்தபோதுதான் நடந்த கருமாந்திரம் வெளியே தெரிய வந்தது.

நடந்தது என்னவென்றால்...

சிகிச்சைக்காக வந்த மருமகனை நல்லபடியாக கவனித்துள்ளார் சீதா. அவருக்கு மருந்து மாத்திரை தருவது, சாப்பாடு தருவது என்று கவனித்துள்ளார். இரவெல்லாம் விழித்துப் பார்த்துக் கொள்வாராம்.

ஒரு நாள் அவரது கணவர் வெளியூர் போயுள்ளார். அன்று இரவு சீதா, தனது மருமகன் மீது விபரீத ஆசை கொண்டு தவறான பாதைக்குப் போய் விட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் அதைத் தொடர்ந்துள்ளனர். இதனால்தான் உடம்பு சரியாகியும் கூட அத்தை வீட்டை விட்டு நகராமல் இருந்துள்ளார் சீதாவின் மருமகன்.

இந்த விவகாரம் அத்தையின் கணவருக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர் அதிர்ச்சி அடையவில்லை. வடிவேலு பட கணக்கில் மனைவியுடன் ஒரு டீலிங்கை ஏற்படுத்திக் கொண்டாராம்.

அதாவது, பேசாமல் நீ உன் மருமகனையே திருமணம் செய்து கொள். பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். நான் சாட்சியாக இருக்கிறேன். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் என்னைப் பத்தி விட்டு விடக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம்.

இது மருமகனுக்கும், அத்தைக்கும் பிடித்துப் போகவே ஓகே சொல்லி விட்டனர். அடுத்து நாகர்கோவில் திருமணப் பதிவு அலுவலகத்திற்குப் போய் திருமணமமும் செய்து கொண்டு பதிவும் செய்துள்ளனர்.

ஆனால் அதன் பின்னர் தனது கணவரை புறக்கணிக்க ஆரம்பித்தார் அத்தை. அவரை அண்ட விடுவதே இல்லையாம். மருமகனை மட்டுமே விழுந்து விழுந்து கவனித்தாராம். அப்போதும் கூட கொந்தளிக்கவில்லையாம் இந்த மாமா... அமைதியாக வீட்டை விட்டு சென்னைக்குப் போய் விட்டாராம்.

அவர் போய் ரொம்ப நாளானதாலும், ராஜா தனது வீட்டுக்குப் போகாமல் அத்தை கூடவே இருந்ததாலும்தான் அனைவருக்கும் சந்தேகம் வந்து போலீஸ் வரை போயுள்ளனர்.

இந்த விவகாரத்தை எப்படி டீல் செய்வது என்று தெரியாமல் தற்போது போலீஸாரும் விழித்துக் கொண்டுள்ளனராம்.

முடியலைல்ல...?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+