அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு... தினகரன் பேட்டியால் பரபரப்பு - வீடியோ

டிடிவி தினகரன் ஆகஸ்டு 5ஆம் தேதி தலைமை அலுவலகத்துக்கு வரலாம், அதனால் ரகளை உண்டாகலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சி பணியாற்ற வருவார் என்ற தகவலால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன், முடக்கிவைக்கப்பட்டுள்ள அதிமுக சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த தினகரன், ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைய 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு வரும் ஆகஸ்டு 5 தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கம் போல் பல்டியடித்து கட்சியையும் ஆட்சியையும் எடப்பாடி பழனிச்சாமியே வழிநடத்துவார் என்று ஈபிஎஸ் அணியினர் அறிவித்தனர்.

இது டிடிவி தினகரனை எச்சரிப்பது போல இருக்கிறது என விமர்சனம் எழுந்திருக்கிறது. அதேவேளையில் டிடிவி தினகரன் சொன்னது போல அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தால் அங்கு மிகப் பெரிய மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதனால், தலைமை அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில் இன்னும் மூன்று நாட்களில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு காட்சிகள் அரங்கேறும் என அதிமுக தொண்டர்களே பேசிக்கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+