For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனிதா மரணம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டம்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராடி வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பலகலைக் கழகத்தில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனிதா மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதா ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் நீட் தேர்வால், மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்டார்.

In Chidambaram Annamalai university above 2000 students protesting

அதிலிருந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இன்று திங்கட்கிழமை கல்லூரி திறந்ததும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் 2000க்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா மரணத்துக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.

English summary
In Chidambaram Annamalai university above 2000 students protesting in University Campus and demanding justice for Anita's death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X