மலேசியாவிற்கு ஊதுபத்தியில் கொகைன் கடத்திய இளைஞர்... மதுரையில் கைது - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு கொகைன் போதைப் பொருள் கடத்த முயன்ற இளைஞர்கைது செய்யப்பட்டார். போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுரையிலிருந்து கொழும்பு வழியாக மலேசியாவுக்கு செல்லும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

In Madurai airport customs officials seized cocaine form a traveler

அதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் ஊதுபத்தியில் 7 கிலோ கொகைன் போதைப்பொருளைக் கடத்தியது தெரியவந்தது. அதனையடுத்து அவரிடமிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Madurai airport customs officials seized cocaine form a traveler and inquiry in progress.
Please Wait while comments are loading...