காளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா? - வீடியோ
மதுரை காளவாசலில் உள்ள மசூதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனை யார் எறிந்திருப்பார்கள் என போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை: மதுரை காளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பந்துகள் இருந்ததைக் கண்டு தொழுகை நடத்த வந்த இஸ்லாமியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை, காளவாசல் பகுதியில் புகழ்பெற்ற மசூதி உள்ளது. இங்கு வழக்கம் போல முஸ்லிம்கள் தொழுகை நடத்த வந்தபோது, இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் இரு பிளாஸ்டிக் பந்துகள் இருந்ததைப் பார்த்துள்ளனர்.

அதனை எடுத்து ஆராய்ந்த போது அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்லாமியர்கள் உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து அங்கு, வெடிபொருள் நிபுணர்களுடன் காவல்துறையினர் வந்தனர்.
மேலும், வெடி மருந்து நிபுணரும் காவல்துறையினரும் பள்ளிவாசல் முழுக்க சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வேறெங்கும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கவில்லை. மசூதி வளாகத்துக்குள் வெடிபொருள் நிரப்பிய பந்தை யார் எறிந்து சென்றிருப்பார்கள் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications