இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது புதிய 1000 ரூபாய் நோட்டு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
சென்னை: புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் சில மாதங்களில் புழக்கத்திற்கு விடப்படும் என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் இன்று அறிவித்தார்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் தற்போது புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதையடுத்து புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள், அறிமுகம் செய்யப்பட்டு இன்று முதல் வங்கிகள் வாயிலாகவும், நாளை முதல் ஏடிஎம்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.
In next few months Rs 1000 notes will also be brought in with a new dimension and design: Shaktikanta Das, Economic Affairs Secy pic.twitter.com/wHKYW0Wj9I
— ANI (@ANI_news) November 10, 2016
இந்த நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளதாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்தார்.
புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அளவிலும், வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் என்றும், இன்னும் சில மாதங்களில் அந்த ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நோட்டுக்கள் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் கொண்டவையாக இருக்கும் என தெரிகிறது. இதன் மூலம், ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஒழிந்துவிட்டன என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை. புதிய வடிவில் சில மாதங்களில் உங்கள் கரங்களில் அவை தவழ உள்ளன. அதேநேரம், இந்தியாவில் புதிதாக ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே அறிமுகமாகியுள்ளன. மற்ற அனைத்து கரென்சிகளும் இனிமேலும் தொடர உள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications