சிவகாசி அருகே வேன் கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து... 6 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்...
சிவகாசி : பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் திடீரென கவிழ்ந்து தீப்பிடித்ததில் 6 பெண்கள் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்த பணியாளர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்காக வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

அந்த வேன், மீனம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் வேனுக்குள் இருந்த தொழிலாளர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து காயமடைந்தனர். அதேசமயம், கவிழ்ந்த வேகத்தில் வேனின் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால், காயமடைந்த தொழிலாளர்கள் வேனுக்குள் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். இதில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications