மேலும் ஒரு அரசு அதிகாாி தற்கொலை முயற்சி...உயா் அதிகாாிகள் டாா்ச்சா் என எஸ்.எம்.எஸ்
ராமநாதபுரம்: உயா் அதிகாாிகள் டாா்ச்சா் செய்வதாக் கூறி மதுரையைச் சேர்ந்த கணேஷ் கார்த்திக் என்ற துணை மின் பொறியாளா் மேற்கொண்ட தற்கொலை முயற்சி தமிழக அரசு வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.
கணேஷ் கார்த்திக் பரமக்குடி அருகே காவனூரில் உள்ள துணை மின் நிலையத்தில் துணை மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார்

வழக்கம் போல் பணிக்கு சென்ற அவர் தனது நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தற்கொலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது உயர்அதிகாரிகளான ராமசுப்பு, லூர்துசேவியர் மற்றும் தட்சணாமூர்த்தி ஆகியோர் தனக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வருவதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து அதிா்ச்சியடைந்த நண்பா்கள், மற்றும், ஊழியா்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது கணேஷ் கார்த்திக் மயக்க நிலையில் இருந்ததாா். உடனடியாக கணேஷ் கார்த்திக்கை மீட்ட சக ஊழியா்கள் அவரை மருத்துமனையில் சோ்த்தனா்.
அதிகாாிகள் மறுப்பு
துணை பொறியாளரின் தற்கொலை முயற்சி குறித்து விளக்கமளித்த மின்துறை உயா் அதிகாரிகள், கணேஷ் கார்த்திக் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக தொிவித்தனா்.
கணேஷ் கார்த்திக் மீதான விசாரணை நிலுவையில் இருப்பதால் அவருடைய பணி மாற்ற உத்தரவை திருப்பி அனுப்பியதாகவும் கூறியுள்ளனர். இதற்கு பழி வாங்கவே கணேஷ் கார்த்திக் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி அதிகாரிகளின் தொந்தரவால் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் நன்னிலம் பிடிஓ அலுவலகத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனது உயா் அதிகாாியின் கெடுபிடியால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இந்த சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு அரசு அதிகாாி தற்கொலை முயற்சியை மேற்கொண்டது அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications