கடைசி நேரத்தில் வந்த 186 பேர்.. இரவு 9 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு.. தென்காசியில் நடந்தது என்ன?
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 235வது பூத்தில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் காத்திருந்த 186 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதன் காரணமாகவே தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக 82.41% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிகளவில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தென் மாவட்டங்களில் குறைவான அளவிலேயே வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் 85.15% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதனிடையே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர். இதனால் சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களும் நடந்தது. இதனால் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்ட பலரும் மாலையில் தாமதமாகவே சொந்த ஊர் சென்றடைந்தனர்.
திருச்சி நெடுஞ்சாலை வரை போக்குவரத்து நெரிசலும் இருந்ததால், வாக்காளர்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவித்தனர். அப்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட 235வது பூத்தில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் திடீரென 185 பேர் வந்தனர். இதனால் அவர்களுக்கு தேர்தல் அலுவலர்கள் டோக்கன் விநியோகம் செய்தனர்.
இதையடுத்து ஒவ்வொரு நபராக உள்ளே அனுமதிக்கப்பட்டு இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதனால் தென்காசி மாவட்டத்தில் மொத்தமாக 82.41% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. நேற்று தவெக தரப்பில் கூடுதலாக 2 மணி நேரம் வாக்களிக்க நீட்டிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், வாக்காளர்கள் பலருக்கும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வாக்குப்பதிவு 9 மணி வரை நடந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications