சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்!
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.
Recommended Video

சென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக வாதாடிய வழக்கறிஞர் விஜயகுமார் விலகியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்து கொன்ற வழக்கில் தஷ்வந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தான். ஆனால், கடந்த சில மாதங்களாகவே தஷ்வந்த் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளான்.
இதனிடையே, தாய் சரளாவைக் கொன்றுவிட்டு தஷ்வந்த் மும்பைக்கு தப்பியோடினான். போலீசார் அவனை மும்பையில் கைது செய்த நிலையில் கழிவறைக்கு செல்வதாக கூறி போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த்.

புழல் சிறையில் அடைப்பு
இதையடுத்து மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கியிருந்த அவனை போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்நிலையில் தஷ்வந்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதையடுத்து தஷ்வந்த் இன்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

தஷ்வந்த் வக்கில் விலகல்
அப்போது ஹாசினி கொலைவழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து உங்களுக்கு என வழக்கறிஞர் இல்லை என்ன செய்யப்போகிறீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

நானே வாதாடிக்கிறேன்
அதற்கு பதிலளித்த தஷ்வந்த் தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தான். இதுதொடர்பாக மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய நீதிபதி அரசின் இலவச சட்ட மையத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
முன்னதாக நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவரப்பட்ட தஷ்வந்தை அங்கு திரண்டிருந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications