11 வருடங்களுக்குப் பிறகு உசிலம்பட்டியில் நடந்த கோலாகல ஜல்லிக்கட்டு -வீடியோ
மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில் கடந்த 11 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. அங்கு 11 வருடங்கள் கழித்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் மக்களும் காளைபிடி வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
மதுரை: மதுரை உசிலம்பட்டி கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. அதில் வீரர்களும் காளை உரிமையாளர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மதுரை உசிலம்பட்டியில் வருடம்தோறும் ஜல்லிக்கட்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், பல்வேறு காரணங்களால் அங்கு ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படவில்லை.

அண்மையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என எழுந்த மிகப் பெரிய புரட்சியால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான உச்சநீதிமன்ற தடை நீக்கப்பட்டு, ஜல்லிகட்டு நிரந்தர சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதனையடுத்து, தமிழகத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு அனைவரும் வியக்கும் வண்ணம் நடத்தப்பட்டது.
தற்போது, மதுரை உசிலம்பட்டியில் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, 11 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஜல்லிக்கட்டு மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் நடத்தப்பட்டது. அதில், 700 காளைகளும் 650 காளை பிடி வீரர்களும் கலந்துகொண்டர்.
ஜல்லிக்கட்டில் விளையாடி காளையை அடக்கிய வீரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. 11 வருடங்கள் கழித்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதால் ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications