"மப்பு" ஏறி உடைகள் கலைந்து அலம்பல்... போதையில் சாலையிலேயே துவண்ட பெண் ஆசிரியை
வேலூர் : போதையில், ஆடைகள் கலை(ளை)ந்து, சாலையில் துவண்டு விழுந்த பெண் ஆசிரியையை, மகளிர் போலீஸார் சென்று மீட்ட சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையில் சிறுவன், கோவையில் பள்ளி மாணவி, திருச்சியில் கல்லூரி மாணவி, தஞ்சையில் பட்டதாரி பெண் என மது அருந்தி தள்ளாடும் காட்சிகள் வாட்ஸ் அப்பிலும், ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என, பல்வேறு கட்சியினர், மாணவர்கள், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூரில் பெண் ஒருவர் மது போதையில் ஆடைகள் கலைந்த நிலையில் சாலையிலேயே சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், பெங்களூரு சாலையில் உள்ள சேண்பாக்கம் பகுதி, எப்போதும் குடிகாரர்கள் கோட்டையாக உள்ளது. மாலை, 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் வழியாக யாரும் செல்ல முடியாதபடி குடித்து விட்டு கலாட்டா நடப்பதுண்டு.
இதை சமாளிக்க முடியாமல் போலீஸார் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, 8 மணிக்கு இளம் பெண் ஒருவர், ஆடைகள் கலைந்த நிலையில் போதையில் சாலையோரம் படுத்து புரண்டு, தகராறு செய்து கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்து, அப்பகுதி வழியாக சென்றவர்கள், வேலூர் மகளிர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீஸார் விரைந்து சென்று, அந்த பெண்ணை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மாற்று உடை அணிவித்து, மயக்கம் தெளிய வைத்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில், சேர்க்காடு பகுதியைச் சேர்ந்த அந்த இளம் பெண், பி.ஏ., படித்து அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிகிறார் என்பதும், கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.
வேலூர், புதிய பேருந்து நிலையம் வந்த அவர், விரக்தியில் அளவுக்கு மீறி மதுவை குடித்துள்ளதும் தெரியவந்தது. இதை கேட்டு நொந்து கொண்ட கொண்ட மகளிர் போலீஸார், அவரது கணவரை, அழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.
மதுவிலக்கு வந்தால் தான், பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்று அரசியல் கட்சியினர் கணக்கு போட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில், படித்து ஆசிரியர் வேலை பார்க்கும் பெண்ணே, குடித்து விட்டு, ஆடை கலைந்த நிலையில், மயங்கி கிடந்தது வேலூர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications