கனமழையால் கந்தரகோலமான காஞ்சிபுரம் மாவட்டம்- 906 ஏரிகள் நிரம்பின

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள 906 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் முடிச்சூர், தாம்பரம் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் படகுகள் மற்றும் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் பலத்த மழைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 912 ஏரிகளில் 906 ஏரிகள் நிரம்பியுள்ளதாகவும், அவைகளிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் கஜலெட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 20000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த முடிச்சூர்

வெள்ளம் சூழ்ந்த முடிச்சூர்

ஏரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் முடிச்சூர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். பாரதி நகர் மக்கள் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தவிக்கும் தாம்பரம்

தவிக்கும் தாம்பரம்

தாம்பரம் அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் ஏற்பட்டு நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். சில வார்டுகளில் இருந்து நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். தாம்பரம் சாலைகளில் இடுப்பளவிற்கு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

போக்குவரத்து நிறுத்தம்

போக்குவரத்து நிறுத்தம்

ஆறுகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி ஓடி வருகிறது. வேடல் ஏரி நிரம்பியுள்ளதையடுத்து அங்குள்ள பாலத்தில், முன்னெச்சரிக்கை கருதி வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்குன்றம் - திருவள்ளூர் இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+