அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்க கல்வி துறை உத்தரவு
நெல்லை: பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்காக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்புகார் பெட்டி வைக்க கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகள் சில இரண்டு நாட்கள் கழித்து திறக்கப்படும் என அறிவித்துள்ளன. கல்லூரிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கை இன்னும் முடியவில்லை. இதனால் இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து திறக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் குற்ற செயல்கள் நடைபெறுவதை கண்டறியவும், தடுக்கவும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புகள் இவற்றை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் வைக்கப்படும புகார் பெட்டிகளை மாதம் ஒரு முறை திறந்து அதில் உள்ள மனுக்களை தலைமை ஆசிரியர் எடுத்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த புகார் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் தீர விசாரித்து தீர்வு காண வேண்டும் என்றும் அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புகார்களின் தன்மையை பொறுத்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications