ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவு பெருகுகிறது... இதுவரை 4 சுயேச்சைகள் ஆதரவு
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கணேசன் என்பவர் அதிமுக (புரட்சிதலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க புரட்சிதலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு இதுவரை 4 சுயேட்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக இரு அணிகளும், திமுக, தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி என பலமுனை போட்டி நிலவுகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு சந்திக்கும் தேர்தல் என்பதால் சசிகலா தரப்பு வேட்பாளர் தினகரனுக்கும், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் கட்டாயம் வென்று பலத்தை நிரூபிக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இரு அணியினரும் உள்ளனர். இதனால் பணத்தை வாரி இறைத்து வருகிறார் தினகரன்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டிடிவி.தினகரன் தொடர்ந்து வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொண்டர்களுடன் தொப்பி அணிந்த படி நடந்து சென்றும், வாகனத்தில் சென்றும் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல் மதுசூதனனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மக்கள் அலை, அலையாய் வந்து ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடார் கூட்டமைப்பு சார்பில் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிடும் கணேசன் என்பவர் மதுசூதனனுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ் அணிக்கு இதுவரை 4 சுயேச்சை வேட்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே சுயேச்சை வேட்பாளர்கள் மஞ்சுளா ரவிக்குமார், ரேணுகா தேவி ஆகியோர் மதுசூதனனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications