இந்தியாவில் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருக்கிறது: நரேந்திர மோடி
சென்னை: இந்தியாவின் மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருப்பதாலேயே பாய்லின் புயல் இங்கே நீடித்திருக்கவில்லை என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை வருகை தந்த மோடி விமான நிலையத்தில் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்று இந்த உலகமே நம்மைப் பார்த்து நகைக்கிறது. யாரோ ஒருவர் கனவு கண்டனாராம். அவர் சொன்னபடி ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக நம்பி அதை தேடிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
இந்த ஆயிரம் டன் தங்கத்தைவிட பல்லாயிரம் கோடி கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது. அதை முதலில் மீட்கட்டும் மத்திய அரசு.

அண்மையில் இந்தியாவை பாய்லின் புயல் தாக்கியது. ஆனால் அந்தப் புயல் இங்கே நீடித்து நிலைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவிலேயே மற்றொரு புயல்.. மாற்றத்துக்கான புயல் மையம் கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் மாற்றத்துக்கான சூறாவளி அலை வீசிக் கொண்டிருக்கிறது. அதை தமிழ்நாட்டிலும் நான் காண்கிறேன். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் நிச்சயம் தமிழகத்தின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் கனவுகள் பாஜகவின் கனவுகள்.
திருச்சியில் மிகப் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினோம். மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இதற்குக் காரணம் தமிழக மக்களும் பாரதிய ஜனதா தொண்டர்களும்தான். உங்கள் அனைவருக்கும் நன்றி கூறவே நான் இங்கு மீண்டும் வந்துள்ளேன்.
காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்குவதற்காக பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார் மோடி.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications