26ம் தேதியும்: இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த பிரச்சனைகளும்
சென்னை: நரேந்திர மோடி பதவியேற்ற 26ம் தேதி அன்று இந்தியா, பாகிஸ்தான் இடையே முன்பு நடந்த சில கசப்பான சம்பவங்களை நினைவு கூர்வோம்.
நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக இன்று அதாவது மே 26ம் தேதி பதவியேற்றார். 26ம் தேதி என்பது இந்தியா, பாகிஸ்தானுக்கு நல்ல தேதி இல்லை என்று கூறலாம்.
அது ஏன் என்று பார்ப்போம்.

1999
1999ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி கார்கில் போரின்போது ஆபரேஷன் சபேத் சாகரை இந்திய விமானப்படை அறிமுகப்படுத்தியது. மே 26ம் தேதி தான் கார்கிலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் இடையே சண்டை நடந்தது.

அகமதாபாத் குண்டுவெடிப்பு
2008ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 70 நிமிடங்களில் 21 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததில் 56 பேர் பலியாகினர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட பாகிஸ்தானிடம் உதவி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை
2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை இந்தியர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

இன்று
2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி அதாவது இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications