ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.. சச்சின் டெண்டுல்கர், அஸ்வின் இரங்கல்
ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீதேவி இப்போது இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது என்று விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு இருக்கிறார். அதேபோல் விளையாட்டு வீரர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
சேவாக் இரங்கல்
இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சேவாக் ''ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றுள்ளார்.

சச்சின்
அதேபோல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ''ஸ்ரீதேவி நம்மிடையே இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றுள்ளார்.
|
அஸ்வின் இரங்கல்
தமிழக வீரர் அஸ்வின் ''ஸ்ரீதேவி இறந்துவிட்டாரா? அவரது இழப்பை ஏற்கமுடியவில்லை. இதுதான் வாழ்க்கை போல. அவருக்கு நெருக்கமானவர்கள் இந்த துக்கத்தை தாங்கி கொள்ள வேண்டும்'' என்றுள்ளார்.

கங்குலி இரங்கல்
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கங்குலி ''ஸ்ரீதேவியின் மரணத்தை பற்றிய செய்தி பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவரது குடும்பத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications