15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகள் சந்திக்கும் பாலியல் சவால்கள்... ஷாக் தகவல்!
நெல்லை: இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான 5 சதவீத சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு இருப்பதாக நெலலையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பது குறித்த ஒரு நாள் கருத்தரங்கு நெலலையில் நடந்தது. தமிழ்நாடு தன்னர்வ செயல் குழுமத்தின் தலைவர் ராஜன் வரவேற்றார்.
குழுமத்தின் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமை ஏற்று பேசுகையில், இந்தியாவில் உள்ள குழந்தை தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர். வீட்டு சூழல் காரணமாக பலர் குழந்தை தொழிலாளர்களாக மாறுகின்றனர்.

குழந்தைகள் சமூக சூழலை எதிர் கொள்ளும் போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகளுக்கு கட்டாய பாலியல் தொந்தரவு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடந்த பின்னர் மருத்துவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள், தடவியல் சாட்சிகளை சேகரித்தல் ஆகியவற்றில் முக்கிய பங்கு நமக்கு இருக்கிறது என்றார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பது, பாலியல் வன்முறை நடந்த பின்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கருத்தரங்கில் ஆலோசிக்கப்பட்டது.
கருத்தரங்கில் நெல்லை எஸ்பி விக்ரமன், இந்திய மருத்துவர் சங்க மாநில துணைத் தலைவர் டாக்டர் அன்புராஜன், திருமலை கொழுந்து ஆகியோர் பேசினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications