இந்திராணி முகர்ஜி... ஒரு புரியாத புதிர்... டுவிட்டர் கமெண்ட்
இந்திராணி முகர்ஜி... ஊடகங்கள் உச்சரிக்கும் ஒரே பெயராகிவிட்டது. தான் பெற்ற மகளையும், மகனையும் தம்பி, தங்கைகள் என்று உலகத்திற்கு அறிமுகப்படுத்திய அபூர்வ பெண்மணி. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்து குழந்தை பிறந்த பின்னர் அந்த கணவரையும் விட்டு பிரிந்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் இந்திராணி.
தனது முதல்கணவர் மூலம் பிறந்த மகளான ஷீனா போராவிற்கும் மூன்றாவது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுலுக்கும் இடையே காதல் மலரவே என்ன செய்வதென்று அறியாமல் தவித்து, கடைசியில் கூலிப்படை அமர்த்தி கொலை செய்து இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
இந்த கொலையை மறைக்க அவர் செய்த தகிடுதத்தங்கள் நிமிடத்திற்கு ஒன்றாக வெளியாகி வருகின்றன. வட இந்திய சேனல்களின் டி.ஆர்.பி எகிறிக்கொண்டிருக்கிறது. நாட்டின் மிக பிரச்சினைகளைவிட இன்றைக்கு ஷீனா போரா கொலைவழக்கும், இந்திராணியின் திருமணமும்தான் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முக்கிய விவாதப் பொருளாகிவிட்டது.
டுவிட்டரில் இந்திராணியை வைத்து மீம்ஸ் போட்டு கலக்குகின்றனர்.
|
நீ பாத்தியா?
ஷீனாவை கொன்ற பின்னரும் அவர் அமெரிக்காவில் உயிரோடு இருப்பதாக மெயின்டெயின் செய்தார் இந்திராணி. ஷீனா கொலை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு இந்திராணி கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போதும், ஷீனா அமெரிக்காவில் இருப்பதாக கூறி வருவதுதான் அதிர்ச்சி தகவல். இதற்காக போடப்பட்டதே இந்த மீம்ஸ்.
|
ஒரே குழப்பமா இருக்கே?
யார் யாருக்கு புருஷன்... யாருக்கு பிறந்த குழந்தை யார் என்று படம் போட்டு பாகம் குறித்து விளக்கினால் நம்மவர்களுக்கு குழப்பமாகவே இருக்கிறது.
|
விடை புரியாத புதிர்
அபூர்வ ராகங்கள் படத்தில் யாருக்கு யார் என்ன உறவு என்று கேட்டு ஒரு புதிர் போடுவாரே அது கூட புரிஞ்சிடும் போல இருக்கே? இந்திராணி கதை புரியமாட்டேங்கிதே என்கின்றனர் வலைஞர்கள்.
|
ராம்கோபால் வர்மா கதை
பாலிவுட்டில் ராம்கோபால்வர்மா வெகு விரைவில் இந்திராணி கதைய படமாக எடுப்பார். அப்ப நாம டீடெய்லா தெரிஞ்சிக்கலாம் என்கிறார் ஒருவர்.
|
ஆண்கள் முட்டாள்களா?
பல ஆண்களை பல வருடங்களுக்கு முட்டாளாக்க முடியும் என்பதற்கு மற்றொரு உதாரணம்... இந்திராணி! என்று வருத்தப்படுகிறார் ஒருவர்.
|
டப்பிங் சீரியல்
இந்திராணி முகர்ஜி கதையை விரைவில் சீரியலா எடுப்பாங்க ....டப்பிங் பண்ணி தமிழ் சேனலிலும் போடும்போது பாருங்க கதை புரியும் என்கிறார் ஒருவர்.
|
வெட்டப்பட்ட வேர்
இந்திராணி முகர்ஜியின் குடும்ப மரத்தில் இருந்து வேர் வெட்டப்பட்டு விட்டது என்று வருத்தப்படுகிறார் ஒரு வலைஞர்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications