வெற்றிகரமாக நடந்தது பழனி-உடுமலைப்பேட்டை அகல ரயில் பாதை சோதனை ஓட்டம்!
பழனி: நீண்ட கால கோரிக்கையான பழனி-பொள்ளாச்சி அகல ரயில்பாதை பணிகள் முடிவடையும் தருவாய்க்கு வந்துள்ளன. பழனி-உடுமலைப்பேட்டை வரையில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பழனி-பொள்ளாச்சி நடுவேயான அகல ரயில்பாதை பணி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 63 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பாதையில் தற்போது பணிகள் முடிந்துள்ளன. இந்த வழித்தடத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் இன்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது.

தண்டவாளத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்பட்டதுடன் பயணிகள் ரயில் பெட்டிகளுடன் வெள்ளோட்டம் விடப்பட்டது. எனினும் அதிவேக ரெயில் இயக்கி சோதனை நடத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது.
அதன்படி நேற்று திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து 10 டிராலிகளுடன் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் மற்றும் அதிகாரிகள் புறப்பட்டனர். பழனி முதல் உடுமலைபேட்டை வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில் இயக்கி சோதித்து பார்க்கப்பட்டது.
இன்று உடுமலைப்பேட்டையில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இன்று நடந்த சோதனையில் தண்டவாளங்கள், சிக்னல்கள், பாலங்கள் சரிபார்க்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications