விடாமல் துரத்தித் துரத்தி கள்ளத்தனம் செய்த இன்ஸ்பெக்டர் மனைவி- எஸ்.ஐ.. இருவர் மீதும் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் ஒரு இன்ஸ்பெக்டரின் மனைவியும், சப் இன்ஸ்பெக்டரும் உயர் அதிகாரிகள் கண்டித்தும் கூட கவலைப்படாமல், சஸ்பெண்ட் செய்தும் கூட கவலைப்படாமல் துரத்தித் துரத்தி கள்ளக்காதலில் திளைத்துள்ளனர். அத்துடன் நில்லாமல் இருவரும் சேர்ந்து, இன்ஸ்பெக்டரின் இரு குழந்தைகளையும் கொடூரமாக அடித்து சித்திரவதையும் செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை சிங்காநல்லூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சுப்பு. 53 வயதாகும் இவர் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். தனது மனைவியின் செயலால் தற்போது நீண்ட விடுப்பில் இருக்கிறார். இவரது மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு எதிரில் வசித்தவர் தமிழ்மணி. இவர் கோவை மாநகர போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த போது தமிழ்மணிக்கும், சாந்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது அப்படியே கள்ளக்காதலாக மாறிப் போனது. இருவரும் அடிக்கடி தனியைில் சந்தித்து சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்தனர்.

இது சுப்புவுக்குத் தெரிய வரவே அதிர்ச்சி அடைந்தார். மனைவியைக் கண்டித்தார். ஆனால் அவர் கேட்பதாக இல்லை. இதையடுத்து உதவி ஆணையர் விஸ்வநாதனிடம் சப் இன்ஸ்பெக்டரின் செயல் குறித்து புகார் கொடுத்தார். அவர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் சுப்பு சொன்னது உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து தமிழ்மணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சஸ்பெண்ட் முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்த அவரை தஞ்சைக்கு இடமாற்றம் செய்தனர். ஆனாலும் விடாமல் தமிழ்மணியும், சாந்தியும் தங்களது தொடர்பை தொடர்ந்தனர், மேலும் இறுக்கமாக்கினர்.

தங்களது கள்ள உறவுக்கு தனது இரு குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக சாந்தி கருதினார். அதையே தமிழ்மணியும் கருதினார். இதனால் இருவரும் சேர்ந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பெல்ட்டால் அடிப்பதும், சித்திரவதை செய்வதுமாக இருந்துள்ளனர்.

இதனால் துடித்துப் போனார் சுப்பு. சிங்காநல்லூர் போலீஸில் இருவர் மீதும் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் சாந்தி, தமிழ்மணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை.

கோவை போலீஸ் வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+