"பச்சை கலரு பொட்டி, மஞ்சளாயிடுச்சே"..சீரியஸா பேசிட்டிருந்த விஜயபாஸ்கர்.. யாரந்த திமுக அமைச்சர்? ஹாஹா
சென்னை: இன்று தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில், திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசியது, பலரது கவனத்தையும் ஈர்த்தது.. என்ன நடந்தது சட்டமன்றத்தில்?
திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் சட்டசபையில் இடம் பெற்றிருந்தால், அவையே கலகலப்பாக இருக்கும்... ஜெயலலிதா ஏதாவது சீரியஸாக பேசி கொண்டிருந்தால், துரைமுருகன் உள்ளே புகுந்து வேறு எதையாவது சொல்லிவிடுவார்..
இதனால் தன்னையும் அறியாமல் சிரித்துவிடுவார் ஜெயலலிதா... துரைமுருகன் பேச்சை ரசித்து கேட்பார்.. அவரது பாடி லேங்குவேஜை அடிக்கடி சொல்லி ஜெயலலிதா கிண்டல் செய்வதும் உண்டு.

கண்கலங்கிடுவார்: அதனால் கட்சிக்கும் அப்பாற்பட்டு தலைவர்கள் துரைமுருகனின் சட்டசபை பேச்சுக்கு ரசிகர்களாகி போனதும் உண்டு. கலகலப்பு என்றில்லை, அழுகை, நெகிழ்ச்சி என்றாலும்கூட, துரைமுருகன் கண்கலங்கிவிடுவார்.. இப்படித்தான், சட்டப்பேரவையில் தன்னுடைய 50 ஆண்டுகளை துரைமுருகன் நிறைவு செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்..
துரை - துரை: "துரைமுருகனை கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.. துரைமுருகனை கருணாநிதி அவர்கள், துரை துரை என்று அழைப்பார்.. புன்னகை எப்போதும் அவரது முகத்தில் இருக்கும்.. எனக்கு வழிகாட்டியாக இருந்து கொண்டிருப்பவர்.. மனதில் பட்டதை பேசக்கூடியவர்.. கட்சிக்கும், ஆட்சிக்கும் துரைமுருகன் உறுதுணையாக இருக்கிறார்" என்றார்.. ஸ்டாலின் இப்படி பேசும்போதே துரைமுருகன் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார்.. ஸ்டாலின் பேச, பேச ஒரு கர்சீப்பால் வழியும் கண்ணீரை துடைத்து கொண்டே இருந்தார்..
தற்சமயம், தமிழ்நாடு சட்டப்பேரவை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த கூட்டத்தொடரின்போதும், மூத்த தலைவர் துரைமுருகனின் நகைச்சுவை தினமும் எட்டிப்பார்த்து சென்று கொண்டிருக்கிறது.. அந்தவகையில், இன்றைய தினம், மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று பேசும்போது, திமுக அரசை குற்றஞ்சாட்டினார்.

பச்சைக்கலர்: அவர் பேசும்போது, "6 வருடங்களாக இந்தியாவில் முதலிடத்தில் பெற்ற துறை கடந்த 2 ஆண்டுகளாக பின்னோக்கி சென்றது ஏன்? தெலங்கானா, மகாராஷ்டிரா நம்மை முந்திவிட்டார்கள். ஏன்? மேலும் திமுக பட்ஜெட்டில் சொல்லியிருக்கும் பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் கொண்டு வருவதற்கு முன்னதாகவே சீர் வரிசை கொடுக்கும் திட்டம் ஜெயலலிதா கொண்டுவந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சைக் கலராக இருந்த பெட்டி, மஞ்சளாக மாறியுள்ளது. அம்மா பரிசுப் பெட்டகம், குழந்தைகள் பரிசு பெட்டகமாக மாறியுள்ளது" என பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குறுக்கிட்ட மூத்த தலைவர் துரைமுருகன், "விஜயபாஸ்கர் எது பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார். அது எனக்கு ரெம்பப் பிடிக்கும்" என்றார் கிண்டலாக.. இதைக்கேட்டதுமே விஜயபாஸ்கர் சிரித்துவிட்டார்.. பிறகு சுதாரித்துக் கொண்டு, "உள்ளதைப் பேசுவது நம்புவது போலத் தான் இருக்கும் என்பதை அவை முன்னவர் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றதுமே, பேரவையில் சிரிப்பலை எழுந்தது...!!












Click it and Unblock the Notifications