ராஜிவ் கொலை: 7 தமிழர்களை விடுதலை செய்ய ஜெ.க்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை
சென்னை: ராஜிவ்காந்தி கொலையாளிகளை மனித உரிமை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுத்துள்ள கோரிக்கை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் நளினி ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

சாந்தன் உள்ளிட்டோரின், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதியன்று குறைத்தது. அதற்கு அடுத்த நாளே, சட்டமன்றத்தை கூட்டிய தாங்கள், இவர்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம், 432/433-ன் கீழ் விடுதலை செய்வதாக அறிவித்தீர்கள். அன்று தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரும் முதல்வர் அம்மாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.
அந்த விடுதலை அறிவிப்பை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பினராக நாங்கள் மகிழ்சியுடன் வரவேற்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications