தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இண்டர்நெட் சேவை.. கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கலவரம் கட்டுப்படுத்தப்படாத நிலையில், இணைதள சேவைகளை தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது அரசு.

இதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், இணையதள சேவையை முடக்கியதற்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தது. இதையடுத்து நேற்று மாலை முதல் நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில், இணையதள சேவை துவங்கியது.
இந்த நிலையில், இன்று நிருபர்களிடம் பேசிய, சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் 100 சதவீதம் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. இன்றுக்குள் இணையதள சேவை மீண்டும் துவங்கப்படும். இவ்வாறு சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications