இணையதளத்தில் புகுந்து விளையாடும் தீவிரவாதிகள்: இதோ வருகிறது என்.சி.சி.சி.!
சென்னை: தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம்(என்சிசிசி) ஒரு வழியாக இந்த ஆண்டின் இறுதியில் செயல்பட உள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக சைபர் பாதுகாப்பு பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள என்சிசிசி சைபர் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்சிசிசி திட்டம் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு வழியாக ஒப்புதல் பெற்று இந்த ஆண்டு அந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
என்சிசிசியின் வேலை என்ன, அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது?

தீவிரவாதிகள்
தீவிரவாதிகள் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவதால் மனிதர்களை நம்பி இருப்பது குறைந்து வருகிறது. என்சிசிசியினர் 24 மணிநேரமும் வேலை பார்க்க வேண்டும். இணையதளத்தில் நடக்கும் அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கூற வேண்டும்.

சிறப்பு குழு
என்சிசியின் சிறப்பு குழு என்க்ரிப்டட டேட்டாக்களை கண்காணிக்கும். புகைப்படங்கள் மூலமாக கோட் மொழியில் அனுப்பப்படும் தகவல்களை அவர்கள் கண்டறிய வேண்டும். தீவிரவாதிகள் கோட் மூலமாக தகவல் அனுப்புவதால் இந்த குழுவின் வேலை முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்களில் நடக்கும் தகவல் பரிமாற்றத்தை என்சிசிசி குழு கண்காணிக்க வேண்டும். உளவுத் துறை ஆபரேஷன் சக்ரவியூக் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்படுபவர்களை கண்காணித்து வருகிறது. இந்த கண்காணிப்பை மேம்படுத்துவது தான் என்சிசிசியின் முக்கிய பணி. சமூக வலைதளங்களில் யாராவது அனுப்பும் தகவல் சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அதை அனுப்பியவரை தேடும் பணி துவங்கப்படும்.

இணையதளம்
என்சிசிசி குறித்த திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது இணையதளத்தில் பிரைவசி இல்லாமல் போகும் என்ற பிரச்சனை எழுந்தது. என்சிசிசி பிறரின் பிரைவசிக்குள் தலையை நுழைக்காது என்றும், நிச்சயமாக எதிர்கட்சியினரை வேவு பார்க்காது என்றும் அதிகாரி ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

தகவல்
இணையதளத்தில் நடப்பவை பற்றி என்சிசிசி எந்நேரமும் கண்காணிக்கும். சந்தேகத்திற்கு இடமான தகவல்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்ய தலைமை மையத்திற்கு அனுப்பி வைக்கும். இந்த கண்காணிப்பின் மூலம் தீவிரவாதிகள் நடத்தும் இணையதளங்களை கண்டுபிடித்துவிடலாம். பொதுவாக தீவிரவாதிகளின் இணையதளங்களை பாஸ்வேர்ட் இல்லாமல் அதில் உள்ளவற்றை பார்க்க முடியாது. என்சிசிசி அந்த பாஸ்வேர்டுகளை கண்டுபிடித்து தீவரிவாதிகளின் இணையதளங்களில் இருந்து தகவல்களை சேகரிக்கும்.

தாக்குதல்
தீவிரவாதிகளின் இணையதளங்களில் ஆட்களை பணியமர்த்துவது, தாக்குதல் நடத்தப் போடப்படும் திட்டம் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். என்சிசிசி அந்த தகவல்களை சேகரித்து ஆய்வு செய்து அவை உண்மை எனில் உளவுத் துறைக்கு அனுப்ப வேண்டும்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications