பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கோரி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி: பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் விமான நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த பாபர் மசூதி 1992 டிசம்பர் 6-ந் தேதி நீதிமன்ற உத்தரவுகளை மீறி இடிக்கப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்றைய தினம்வரை பாபர் மசூதியை இடித்தவர்கள் எந்த தண்டனைக்கும் உள்ளாக்கப்படவில்லை.

மத்திய அரசு அமைத்த லிபரஹான் கமிஷன் 63 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டிய பின்னரும் அவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யவில்லை. நீதிமன்றமோ ஆவணங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்காமல் பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி விமான நிலையம் முற்றுகைப் போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப்பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோன்று சென்னை,மதுரை,கோவை ஆகிய இடங்களிலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications