For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரம்.. மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர் உள்ளிட்டோரிடம் சந்தானம் குழு விசாரணை

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தினர்.

Google Oneindia Tamil News

மதுரை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரிடம் சந்தானம் குழுவினர் விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் வகையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பேசிய விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Investigating officer Santhanam team investigate Madurai Kamarajar university Vice chancelor Chinnaiya

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தக்குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா மற்றும் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கலைச்செல்வனிடம் அந்த குழு இன்று விசாரணை நடத்தி வருகிறது.

பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க பொறுப்பானவர் இந்த கலைச்செல்வன். நிர்மலா தேவி இவரிடம் பயிற்சி பெற்றபோதுதான் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து மனு அளித்தவர்தான் கலைச்செல்வன். பேராசிரியர்கள் பயிற்சியில் இருக்கும்போது பணி நீக்கம் செய்யப்படக்கூடாது என்றும் நிர்மலா தேவி சஸ்பென்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கலைச்செல்வன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Investigating officer Santhanam team investigate Madurai Kamarajar university Vice chancelor Chinnaiya and Human resource department director Kalaiselvan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X