எண்ணூரில் முதலாவது திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஐ.ஓ.சி. ஒப்புதல்
சென்னை: சென்னை எண்ணூரில் ரூ5,150 கோடி மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைப்பதற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.) நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.ஓ.சி தலைவர் மற்றும் நிர்வாக மேலாளர் பி அசோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐ.ஓ.சி. போர்டானது எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ஆலோசகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்துக்காக நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முனையமானது 5 மில்லியன் டன் கொள்ளளவு கொண்டது. எண்ணூரில் விரைவில் இந்த திட்டத்தைத் தொடங்குவோம்.
கிழக்கு கடலோரப் பகுதியில் ஐ.ஓ.சி. அமைக்கும் முதலாவது முனையம் இது.

இவ்வாறு அசோக் கூறினார்.
எண்ணூர் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.ஓ.சியும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.

இந்த திரவ இயற்கை எரிவாயு முனையமானது 2017ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications