சென்னை ஐபிஎல் போட்டியை இடமாற்றம் செய்யும் திட்டம் இல்லை- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்களை தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
சென்னை: சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். மீறி நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நேற்று மும்பையில் வாங்கடே மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் வரும் 10-ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா அணியும் மோதவிருக்கின்றன.
இந்நிலையில் காவிரிக்காக எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த போட்டிகளை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்ற தமிழக, கேரள கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த செய்தியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை ஐபிஎல்லை மாற்ற எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளது. இந்த இடமாற்றம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி










Click it and Unblock the Notifications