ஜேடிஎஸ் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது ? : பத்திரிகையாளரை திணறடித்த சித்தராமையா
மதச்சார்பற்ற ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சியா .. யார் சொன்னது என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு: தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், மதச்சார்பற்ற கட்சி என்று யார் சொன்னது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பத்திரிகையாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் வருகிற மே 12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பிரசாரங்கள் மாநிலம் முழுவதும் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜக கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

அதேநேரம் ஏற்கனவே, ஆட்சியில் இருக்கும் காங்கிரஸும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரண்டு கட்சித் தலைவர்களும் தொடர் பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் இந்தத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காது. நாங்கள் மதச்சார்பற்ற கட்சி என்று குறிப்பிட்டார்.
CM Siddaramaiah: We are not going to enter into an alliance with any party. We are a secular party.
— ANI (@ANI) April 20, 2018
Reporter: But Janata Dal(S) is also secular
CM Siddaramaiah: Who told you JDS is a secular party? #KarnatakaElections2018 pic.twitter.com/AsDrc7JAvc
இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மதச்சார்பற்ற கட்சி தானே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சித்தராமையா, மதச்சார்பற்ற ஜனதா தளம் மதச்சார்பற்ற கட்சியா.. உங்களுக்கு இதை யார் சொன்னது என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பத்திரிகையாளர்கள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications