ஜனாதிபதி தமிழ்நாடு வருகை திடீர் ரத்து.. கருணாநிதி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போகுமா?
சென்னை : வரும் ஜூன் 5ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க இருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக திறப்பு விழா தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஜூன் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஜூன் 5ஆம் தேதி திறக்கப்படவுள்ள கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் விழாவில் பங்கேற்கமாட்டார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 5ஆம் தேதி குடியரசுத் தலைவரின் வருகை ஒத்திவைக்கப்பட்டதால் திறப்புவிழா தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications