தேவர் மகன் 2.. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது ஏன்.. அரசியல் ஆதாயம் தேடுகிறாரா கமல்?
நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்து இருப்பது பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தேவர் மகன் 2ம் பாகத்தை எடுக்க போவதாக அறிவித்து இருப்பது பலத்த விவாதத்தை உருவாக்கி உள்ளது.
அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பின் நடிகர் கமல்ஹாசன் மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறார். பிக்பாஸ் ஒருபக்கம், சினிமா ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என்று எல்லா பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேவர் மகன் 2ம் பாகம் எடுக்க போவதாக தெரிவித்துள்ளார்.
[ரஜினி, கமலுக்கு பதிலடி.. விஜய்க்கு குறி வைக்கிறதா திமுக?.. அதிரடி திட்டம்! ]

கருப்பும் காவியும்
முதலில் அரசியல் அறிவிப்பை வெளியிட்ட சில நாட்களில் கமல்ஹாசன் சொன்ன கருத்துதான் கருப்பும் காவியும். உங்கள் அரசியல் கருப்பா, காவியா என்ற கேள்விக்கு, மக்கள் நீதி மய்யத்தில் கருப்பும் இருக்கும் காவியும் இருக்கும் என்றார். கருப்புக்குள் எப்போது காவி இருக்குமென்று என்று கூறி புதிய தத்துவத்தை சொன்னார்.

பாஜகவிற்கு எதிர்ப்பு
அதே சமயம் பாஜக கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். முக்கியமாக தமிழக பாஜக நிர்வாகிகளை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாஜகவிற்கு எதிராக இருக்கும் தேசிய கட்சிகளின் பிரமுகர்களையும் சென்று சந்தித்து வந்தார்.

திராவிடத்திற்கு எதிரா?
இதெல்லாம் ஒரு புறம் இருக்க திராவிட கட்சிகளையும் அவர் எதிர்த்தார். நேரிடியாக இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தில் இருந்து திராவிட கட்சிகளை வெளியேற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் அதிமுகவிற்கு எதிராக மிக கடுமையான விமர்சனங்களை பல நாட்களாக வைத்து வருகிறார்.

மீண்டும் எடுக்க போகிறார்
இந்த நிலையில்தான் பல விதமான வித்தியாசமான அரசியலை பேசி வரும் கமல்ஹாசன், மீண்டும் தேவர் மகன் 2ம் பாகம் எடுக்க போவதாக தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றுள்ளார். மொத்தமாக தேவர் மகன் 2, இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை எடுக்க போவதாக அறிவித்து இருக்கிறார்.

இவ்வளவு நாள் என் இல்லை
இவ்வளவு நாள் இல்லாமல் திடீர் என்று தேவர் மகன் 2ம் பாகம் எடுக்க கமல் முயற்சிப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழாமல் இல்லை. இவ்வளவு நாள் ஏன் இதை பற்றி எதுவுமே பேசவில்லை, இப்போது ஏன் இந்த திடீர் முடிவு என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. முக்கியமாக அரசியலில் பலன் பெற, சாதியை கையில் எடுக்கிறாரா கமல்ஹாசன் என்று பலர் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications