சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினி, கமலுக்கு பதிலடி.. விஜய்க்கு குறி வைக்கிறதா திமுக?.. அதிரடி திட்டம்!

நடிகர் விஜய் திமுகவிற்கு நெருக்கமாக இருப்பதாகவும், திமுகவிற்கு ஆதரவாக விஜய் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விஜய் திமுகவிற்கு நெருக்கமாக இருப்பதாகவும், திமுகவிற்கு ஆதரவாக விஜய் அரசியல் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.

நடிகர் ரஜினியும், நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துவிட்டனர். அரசியல் குறித்த அறிவிப்போடு ரஜினி இருக்கிறார், இன்னும் கட்சிக்கான பெயரை அவர் அறிவிக்கவில்லை.

ஆனால் கமல் அப்படி இல்லாமல் பெயர், கொடியை அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அரசியலுக்கு விரைவில் வருவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ரஜினி என்ன செய்ய போகிறார்

ரஜினி என்ன செய்ய போகிறார்

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே, அவர் ஆளும் கட்சியான அதிமுகவிற்கும், பாஜகவிற்கும்தான் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பல முக்கிய விஷயங்களில் நேரடியாகவோ, மறைமுகமாவோ அவர் இந்த இரண்டு கட்சிகளுக்கும்தான் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருக்கு நெருக்கமானவர்களும் கூட ரஜினி பெரும்பாலும் பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது இல்லை தனிக்கட்சி தொடங்கி பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

[85 வயதில் மாரத்தான்.. தடுக்கி விழுந்த தேவ கவுடா.. அடுத்து என்ன நடந்தது பாருங்கள்! - வீடியோ ]

கமல்ஹாசன் தனி

கமல்ஹாசன் தனி

அதேசயம் இன்னொரு பக்கம் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் கமல்ஹாசன் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பது போல தெரியவில்லை. அதிமுக, திமுகவை தமிழகத்தை விட்டு அகற்ற வேண்டும் என்ற அவர் தேசிய கட்சிகளுடனும் பெரிய அளவில் நெருக்கத்தில் இல்லை. இதன் காரணமாக அவர் பெரும்பாலும் தனியாக நிற்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

விஜய் திமுக

விஜய் திமுக

இந்த கவனித்து வரும் திமுக, நடிகர் விஜயை களம் காண வைத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. விஜயை அரசியலுக்கு கொண்டு வருவதன் மூலம் திமுகவிற்கு கணிசமான வரவேற்பு கிடைக்கும். கமல், ரஜினிக்கு செல்வதற்கு இணையான வாக்கு விஜய் மூலம் தங்களுக்கு கிடைக்கும் என்று திமுக நினைப்பதாக இரண்டு தரப்பிற்கும் நெருக்கமானவர்கள் பேசிக்கொள்கிறார்கள். கட்சியில் இருந்த தளபதி தற்போது தலைவர் ஆகிவிட்டதால், அந்த இடத்தை இந்த தளபதி நிரப்ப வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

இதற்கு முன் என்ன

இதற்கு முன் என்ன

ஆனால் இதற்கு முன் திமுகவிற்கும், விஜய்க்கும் சிறு சிறு சச்சரவும் வந்துள்ளது. கத்தியில் 2ஜி குறித்து வசனம் வைத்தது தொடங்கி சில சச்சரவுகள் இருவருக்கும் இருக்கிறது. அதேபோல் திமுக ஆதரவாளரான விஜயின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூட சென்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்தது எல்லாம் வரலாறு.

இப்போது என்ன

இப்போது என்ன

ஆனால் இந்த சர்ச்சை எல்லாம் முடிவிற்கு வந்து மீண்டும் திமுகவும், எஸ்.ஏ.சியும் நெருக்கமாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் சர்க்கார் பட விழா மேடையில் விஜய் அப்படி பேசினார், இது ஒன்னும் திமுகவிற்கு தெரியாமல் நடந்த விஷயம் கிடையாது என்று கூறுகிறார்கள். தமிழக அரசியலில் தற்போது நடிகர்கள் காய்களாக களமிறங்கி இருக்கிறார்கள், இதில் யார் ராஜா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

English summary
New Wave in TN politics: Response to Rajini, Kamal, DMK may hold up with Vijay.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X