ஆட்டத்தை முடிச்சிடுவாங்க! கவனமா இருங்க.. விஜயை எச்சரித்த டெல்லி தலை! யோசிக்கிறேங்க.. மனம்மாறிய விஜய்
சென்னை: சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள டெல்லிக்கு சென்றுள்ளார் விஜய். இதற்காக நேற்றிரவு சென்னையிலிருந்துப் புறப்பட்ட விஜய், டெல்லியில் தாஜ் ஹோட்டலில் தங்கினார். இந்த பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளதாம்.
கரூர் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் ஏற்கெனவே இரு முறை விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது 3ஆவது முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடைபெறுகிறது. முக்கிய நபர் ஒருவர் - விஜய்யை சந்தித்திருக்கிறார்.

நேற்றிரவு, பாஜக ஆதரவு தொழிலதிபரான அதானியின் நிறுவனத்தில் பணி புரியும் முக்கிய நபர் ஒருவர், அதானியின் டைரக்சனில் விஜய்யை சந்தித்திருக் கிறார்.
இது ஏற்கனவே திட்டமிட்ட ப்ளான் தான். அந்த சந்திப்பில், என்.டி.ஏ. கூட்டணி க்கு விஜய் வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசிய அதானியின் முக்கிய நபர், ''திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உங்களின் அரசியல் எதிர்காலம் அவுட்! திமுகவின் அந்த ருத்திரதாண்டவத்தை எதிர்கொள்ள முடியாது.
திமுக மூலம் உங்களுக்கு குடைச்சல்
அப்போது, நீங்கள், அரசியல் வேண்டாம், சினிமாவுக்கே மீண்டும் திரும்பலாம் என முடிவு செய்து சினிமாவிற்குள் நுழையும் பட்சத்தில் சினிமாவிலும் உங்களுக்கான வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்படும். இரண்டாவது முறை திமுக அதிகாரத்துக்கு வந்தால், உங்களுக்கு எதிராக அவர்களின் முகம் வேறு மாதிரியிருக்கும். உங்களை அரசியல் செய்ய அனுமதித்தால் அடுத்தடுத்து வருகிற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களில் மீண்டும் திமுகவுக்கு எதிராக செயல்படுவீர்கள்.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது - சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்
அதனை திமுக விரும்பாது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது, இந்த தேர்தலோடு உங்களின் அரசியல் வாழ்க்கைக்கும் சினிமா வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக இருக்கும். இப்படி ஒரு சூழல் வராமல் இருக்க வேண்டுமானால், இந்த தேர்தலில் உங்கள் கட்சிக்கு கனிசமான வெற்றி தேவை, நீங்கள் சட்ட மன்றத்துக்குள் செல்ல வேண்டும்.
ஆக, யோசித்து செயல்படுங்கள். நாளைக்கு நீங்கள் எதிர் கொள்ளும் விசாரணையின் போது சில தகவல்கள் உங்களுக்கு சொல்லப்படும் '' என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, ''ஏற்கனவே பாஜகவின் பி டீம் என்று எங்களை விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்போ கூட்டணி வைத்தால் அதை உறுதி செய்வது போலாகும். எங்களுக்கான ஆதரவு தமிழகத்தில் அமோகமாக இருக் கிறது.
தனித்து நின்றால் கேம் ஓவர்
தனித்து நின்று நாங்கள் ஜெயிக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு, என்.டி.ஏ. கூட்டணிக்கு வருவதை முடிவு செய்யலாம். இல்லையெனில், எண்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை இப்போது அறிவிக்க முடியுமா? '' என்று எதிர்கேள்வி கேட்டுள்ளார் விஜய். இதனையடுத்து மேலும் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ஒன்னரை மணி நேர சந்திப்பின் முடிவில், ஆலோசித்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லி அதானியின் முக்கியஸ்தரை அனுப்பி வைத்துள்ளார் விஜய் என்கின்றன டெல்லி தகவல்கள்.
"சிபிஐ என்கொயரி இன்று முடிந்ததும் விஜய்யின் கூட்டணி அரசியல் நிலைப்பாடு குறித்த விவகாரங்களுக்கு தெளிவு கிடைத்து விடும் " என்கிறார்கள் தவெகவினர்.
- சிறப்பு நிருபர் எழில்
-
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
கோயில் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. விலைப்பட்டியல் கட்டாயம்.. அமைச்சர் ரமேஷ் உத்தரவு -
சரியான இடத்தில் சரியான அமைச்சர்.. இரவிலும் கடமை தவறாத வன்னியரசு.. குவியும் பாராட்டு -
நிலம் வச்சிருக்கீங்களா? தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றம் உங்க பணத்தை எப்படி காப்பாற்ற போது தெரியுமா? -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்?












Click it and Unblock the Notifications