வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே!
சென்னை: தவெக அமைச்சரவையில் பங்கேற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, வேண்டாத சலசலப்புகளை கிளப்பி வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஆணவ கொலைகளுக்கு எதிரான சட்டம் குறித்து வன்னி அரசு பேசியது தவெக தலைமையை டென்ஷன் ஆக்கியிருக்கிறது. எனவே, வன்னி அரசுக்கு வாயை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அமைச்சரவையில் விசிக இடம் பெற்றிருக்கிறது. வெறும் 2 எம்எல்ஏக்களை மட்டும் வைத்திருந்தாலும், அக்கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிற விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் விசிக அமைச்சர் வன்னி அரசின் பேச்சு ரசிக்கும்படியாக இல்லை என்று தவெக தலைவர்கள் கவலையடைந்துள்ளனர்.

என்ன பேசினார் வன்னி அரசு?
சாதிய ஆணவப்படுகொலைகளை தடுக்க, ஆணவப்படுகொலை தடுப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது இடதுசாரிகள் மற்றும் விசிகவின் நீண்ட கால கோரிக்கை. கடந்த திமுக ஆட்சியில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டபோது, இப்படியான சட்டத்திற்கு எந்த அவசியமும் இல்லை என்று திமுக கறாராக சொல்லிவிட்டது. இருப்பினும் கோரிக்கையில் விடாப்படியாக இருந்த விசிக, தற்போது அதிகாரத்திற்கு வந்திருக்கும் நிலையில், நிச்சயம் இந்த சடத்தை நிறைவேற்றுவோம் என்று வன்னி அரசு வாக்கு கொடுத்திருக்கிறார்.
தவெகவின் நிலைப்பாடு
உண்மையில் தவெக அரசுக்கு அப்படியான எந்த யோசனையும் இல்லை. இப்போதுதான் புதியதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறோம். வந்த வேகத்தில் சாதிய அமைப்புகளை பகைத்துக்கொள்ள முடியாது. எனவே இந்த விஷயத்தை மெதுவாக டீல் செய்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தது. ஆனால், வன்னி அரசு வார்த்தையை விட்டதால், தவெக தலைமை சூடாகியிருக்கிறது.
இடைத்தேர்தல் வருதே!
இடைத்தேர்தல் வரும் இந்த நேரத்தில், ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என்று சொன்னால், தென் மாவட்டங்களில் தவெக மீது அதிருப்தி ஏற்படும். இந்த அதிருப்தியை வைத்து எப்படி இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியும்? என்று தவெக தலைவர்கள் அப்செட் ஆகியிருக்கின்றனர்.
எனவே இடைத்தேர்தல் முடியும் வரை, சென்சிடிவ் விஷயங்களில் கருத்து சொல்லக்கூடாது, அப்படி மீறி சொல்ல வேண்டும் எனில் தலைமையைின் ஆலோசனையை பெற்ற பின்னர் சொல்ல வேண்டும் என்று வன்னி அரசுக்கு, தவெக தலைமை உத்தரவு பிறப்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
கூட்டணியை குழப்பும் விசிக
முன்னதாக தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், நாங்கள் தவெகவுடன் கூட்டணி இல்லை. எப்போது வேண்டுமானலும் வெளியேற தயார் என்று பேசியிருந்தார். இது விஜய்க்கு பெரிய ஷாக் கொடுத்திருந்தது. தவெகவினரும் திருமாவின் பேச்சை கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. 2 எம்எல்ஏக்கள் என்று கூட பார்க்காமல், அமைச்சர் பதவி கொடுத்ததற்கு இப்படியா பேசுவது என்று அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்த பஞ்சாயத்து முடிந்த நிலையில், தற்போது வன்னி அரசு பேச்சு.. தவெக கூட்டணிக்குள் புது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications