கடந்த முறை 8 கட்டங்களாக.. இந்த முறை 2 கட்டங்களாக தேர்தல்.. மேற்கு வங்கத்தில் அதிரடி மாற்றம் ஏன்?
டெல்லி: தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். கடந்த 2021 தேர்தலில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்றது. இரண்டே கட்டங்களில் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் மேற்கு வங்க தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற ஏப்ரல் 13 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை சம்பவங்கள் நடந்தேறும். கள்ள ஓட்டு, ஓட்டு போடுபவர்களுக்கு அச்சுறுத்தல், ஓட்டுச்சாவடி அபகரிப்பு, ஓட்டுச்சாவடி சூறை போன்ற காட்சிகள் நடக்கும். இதன் காரணமாக பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது. குறிப்பாக, மேற்கு வங்கம், உபி. போன்ற மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகம் என்பதோடு மக்கள் தொகையும் அதிகம் என்பதால் பல கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.
கடந்த முறை மேற்கு வங்கத்தில் (2021) 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் 5 கட்டங்களாகவும், 2011 ஆம் ஆண்டில் 6 கட்டங்களாகவும், 2016 ஆம் ஆண்டில் 7 கட்டங்களாகவும் ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 8 என்பது மிகுதியாக குறைக்கப்பட்டு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பல கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். "தேர்தல் ஆணையம் விரிவான ஆலோசனை நடத்தியது. அனைவருக்கும் வசதியாக இருக்கும் அளவுக்கு ஓட்டுப்பதிவுக்கான காலக்கட்டங்களை, அதன் எண்ணிக்கையை குறைப்பது அவசியம் என்பது கண்டறியப்பட்டது." என ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications